தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது எனவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 80 கொலை சம்பவங்கள் குறைந்து உள்ளது என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு என்பது கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.சென்னை புரசைவாக்கத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உடமைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தனது பணியை சரியாக செய்து உள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் மதுபோதையில் சென்றதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளார்.மேலும் தென் மாவட்டங்களில் நடைபெறும் பழிக்குப்பழி வாங்கும் கொலைகளும் குறைந்து உள்ளது. கஞ்சா, புகையிலை மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரித்து உள்ளது. அதற்கு அத்தகைய வழக்குகளை போலீசார் அதிகம் பதிவு செய்வதே காரணம். போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே இடைவெளியை குறைத்து, நல்லுறவை பேணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,அனைத்து போலீஸ் நிலையங்கள் முன் வரவேற்பு அதிகாரியை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவர் பொதுமக்களை வரவேற்று குறைகளை கேட்கும் வகையில் செயல்படுவார். மேலும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலி அறிமுகம் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க வாரந்தோறும் யோகா, உளவியல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வார விடுமுறை அவசர தேவை இல்லாத காலங்களில் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
















