கொரோனா அலையின் போது காவலர் பணிக்கு செல்வதால் காய்கறிகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் அப்போதைக்கு ராயபுரம், சிங்காரத் தோட்டம், தம்பு லைன், வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு திருவொற்றியூர் காவலர் குடியிருப்பு ஆகிய பகுதியில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் ஆயுதப்படை ஆய்வாளர் மூலம் கோயம்பேட்டில் காய்கறி கொள்முதல் செய்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்கறி வினியோகம் செய்து வந்தனர்.
இந்த வருடம் ஊரடங்கு உத்தரவின் காரணமாக காவல் பணிக்கு செல்லும் காவலர்களின் குடும்பங்கள் காய்கறிகள் வாங்க சிரமப்படுகின்றனர். அதை அதிகாரிகள் உணர்ந்து போன வருடம் காய்கறிகள் விநியோகித்தது போல் இந்த வருடமும் காய்கறிகள் வினியோகிக்க கோரிக்கை வைத்தனர்.














