பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சலீம் (வயது 37). இவர் பட்டுக்கோட்டையில் ஜுவல்லரி வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சலீம் உடல்நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில் சலீமின் குடும்பத்தினர், உறவினர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சலீமின் கொரோனா வைரஸ் பரிசோதனை சான்றில் குளறுபடிகள் உள்ளது. அவரது உடல் உறுப்புகள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும் சலீமின் உடலை மருத்துவமனை நிர்வாகம் எங்களை பார்க்க விடவில்லை. இறந்துபோனது சலீம் தானா என்பதில் சந்தேகம் இருக்கிறது. எனவே புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது சம்பந்தமாக சலீமின் உறவினர்கள் இன்று பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார்.














