07.07.2022
கடந்த *06.07.2022* புதன்கிழமை நேற்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது,
அதில் *அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் P.ரவி அவர்கள் கலந்து கொண்டு பேசிய 14 அம்ச கோரிக்கை மனுவை கொடுத்த போது..*
1. *சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் கடந்த 11.11.2021 அன்று ஏற்பட்ட நிவார் புயலில் பாதிக்கப்பட்டு கடலில் மூழ்கிய விசைப்படகுகளில் சுமார் 10 விசைப் படகுகளுக்கு இந்நாள் வரைக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை அந்த விசை படகுகளுக்கு மிக விரைவாக உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
2. *சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை தமிழ்நாடு மீன்வளத்துறை ஏற்று நடத்த வேண்டும்.*
3. *தமிழக அரசு மீன்வளத் துறையின் மூலமாக விசைப்படகு ஒன்றுக்கு ஆண்டுக்கு 18 ஆயிரம் லிட்டர் டீசல் மானியமாக வழங்குவதை 30,000/ லிட்டர் டீசல் மானியமாக உயர்த்தி வழங்கவேண்டும். அதே போன்று பைப்பர் படகுகளுக்கு ஆண்டுக்கு 4,000 லிட்டர் டீசல் மானியம் வழங்குவதை 10 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும்.*
4. *மீனவ ஆண்களுக்கு மீன்பிடி தடை காலம், மீன்பிடி குறைந்த கால நிவாரணம் வழங்கும் போது கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர்கள் முறை கேடாக அதிக லஞ்சம் கேட்கின்றார்கள். லஞ்சம் கேட்பவர் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க சொன்னால் நடவடிக்கை எடுப்பதில்லை அதற்கு பதிலாக புகார் கொடுத்த உறுப்பினர் பயனாளி பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் அடுத்த ஆண்டு அந்த உறுப்பினர் நிவாரணம் பெற வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் இடத்தில் இருந்து ஜெனுட்டி சான்றிதழ் வர வேண்டும் என்று பொய் சொல்லி பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திரும்ப திரும்ப பொய் சொல்லி பல்வேறு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று சொன்ன போது மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் அப்படி என்னிடம் எந்த விண்ணப்ப படிவமும் நிறுத்திவைக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் கூறினார்கள் அப்போது மீன்வளத்துறை அதிகாரிகள் வறுமை கோட்டுக்கீழ் உள்ளரா என தகவல் சென்னை மாநகராட்சியில் கேட்கப்பட்டுள்ளது என்று பதில் அளித்தார்கள்.*
5. *சென்னை காசிமேடு மீன்பிடி துறைத்தை சென்னை துறைமுக பொறுப்பு கழகம் மேலாண்மை குழு என்ற போர்வையில் துறைமுக வணிக சட்டத்தை மீனவர் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.*
6. *மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
7. *காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும் .*
8. *சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்.*
9. *மீனவ ஆண்கள், மீனவ பெண்கள் 18 வயது பூர்த்தியானவர்கள் பல ஆண்டுகளாக மீனவர் கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதிக்காக காத்திருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் சொல்லி காலத்தை கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அப்படி ஒன்றும் இல்லை இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.*
10. *மீனவர்கள் கடலில் காணாமல் போனால் கண்டு பிடிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய உயிர் காக்கும் மீட்பு படகு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2004 சுனாமிக்கு பிறகு அதுபோன்ற படகுகள் இல்லாத காரணத்தால் மீனவர்கள் கடலில் காணாமல் போனால் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் உதவியை நாடும் போது அவர்கள் துரித நடவடிக்கை எடுப்பது கிடையாது. அப்படியே மீனவர்கள் காணாமல் போனால் கூட அவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ஹெலிகாப்டர்களில் மீனவரை உடன் அழைத்து கொண்டு செல்வதற்கான சிறப்பு அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.*
11. *குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் மீனவர்களுக்கு வீடுகள் கட்டும் போது 800 சதுர அடியில் வீடு கட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது தற்போது கட்டப்பட்டுள்ள வீடுகள் 240 சதுர அடி அல்லது 340 சதுர அடியில் கட்டுவதால் ஆடு, மாடுகளை தங்க வைக்கும் கொட்டகை போன்று இருக்கின்றது எனவே மீனவ மக்கள் வாழ தகுந்த 800 சதுர அடி வீடு கட்ட வேண்டும் என்று கோரிக்கை கொடுக்கப்பட்டது.*
12. *சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மீனவ மக்களின் தகுந்த ஆலோசனையுடன் பணிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.*
13. *எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து சென்னை துறைமுகத்தை இணைக்கும் எக்ஸ்பிரஸ் ஹைவே சாலை பணிகளுக்காக மீனவ மக்களின் செட்டுகள் இடிக்கப்பட்டது. அந்த பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாற்று இடத்தில் செட்டுகள் கட்டி தரப்படும் என்று சொல்லி கலெக்டர் முன்னிலையில் ஒப்பந்தம் நடைபெற்றது. பல ஆண்டுகள் ஆகியும் இந்நாள் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடமோ செட்டுகளோ வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது .*
14. *சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பைப்பர் படகுகள் நிறுத்தத்திற்கு புதியதாக இரண்டு வார்ப்புகள் அமைத்து தரப்பட வேண்டுமென்று அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் 14 அம்ச கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.*
உடன்..
*M.சுப்பிரமணி , J.தணிகைமலை, E.சேகர்*
இவர்களுடன்
*டாக்டர் நாஞ்சில் P.ரவி. தலைவர்.*
*அனைத்து மீனவர்கள் சங்கம் ( AFA ). & இந்திய மீனவள தொழில் கூட்டமைப்பு ( FIFI ).*
















