அனைத்து மீனவர்கள் சங்கம் (IFA) & இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பு (FIFI).சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி

0
275

 

சென்னை காசிமேடு பகுதியில் இயங்கி வரும் பென்டில்மென் கார்டன் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பாஸ்கர் மற்றும் இயக்குனர் T.M.மைக்கல் இவர்கள் மீனவ மக்களிடம் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு அரசு அறிவித்த ரூபாய் 1570 /- தொகையை விட கூடுதலாக ரூபாய் 1800 மற்றும் 1900 என கூட்டுறவு சங்க விதிகளுக்கு மாறாக முறை கேடாக வசூலித்தார்கள் என்பதால்

இவர்கள் நடத்தி வந்த பென்டில்மென் கார்டன் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் அனைத்து அரசு ஆவணங்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இவர்களிடம் இருந்த அரசு பதிவு புத்தகம், அகிடன்ஸ் , தீர்மான புத்தகம் போன்ற அனைத்து அரசு ஆவணங்களையும் பறிமுதல் செய்து உள்ளார்கள். கூடுதல் பணம் வசூலித்த இந்த குற்றத்திற்க்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பென்டில்மென் கார்டன் மீனவ கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள். யாரும் இனிமேல் தலைவர் என்று யாரிடமும் பென்டில்மென் கார்டன் உறுப்பினர்கள் கூடுதல் பணத்துடனோ அல்லது சரியான பணத்துடனோ கட்டவேண்டாம்.

சென்னை காசிமேடு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவே அந்த தனி அலுவலரிடத்தில் உங்கள் சரியான தொகையான ரூபாய் 1570 / யை கட்டி ரசீதை பெற்றுக்கொள்ளுங்கள்.நான் என் பணத்தை கட்டியுள்ளேன் அதற்கான ரசீதை இணைத்துள்ளேன். மேலும் பென்டில்மென் கார்டன் மீனவ கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் பணம் கட்ட செல்பவர்கள் உங்கள் ஆதார் நகல் உங்கள் கூட்டுறவு சங்கத்தின் எண்ணை சொன்னால் போதும் ரூபாய் 1570 / மட்டும் வாங்குவார்கள். முறையாக ரசீது வழங்குகின்றார்கள்.நடவடிக்கை எடுத்த மீன்வளத்துறைக்கு நன்றி!

*இவண்.*
*டாக்டர் நாஞ்சில் P.ரவி.*
*தலைவர் அனைத்து மீனவர்கள் சங்கம் (IFA) & இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பு (FIFI).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here