
சென்னை டென்னிஸ் மைதானத்தில் உள்ள பார்வையாளர் மடத்திற்கு டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜனின் பெயரை வைத்து திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்*
*டென்னிஸ் விளையாட்டை இந்தியா முழுவதும் பார்க்க வைத்த பெருமைக்குரியவர் விஜய் அமிர்தராஜ்- துணை முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு*
*தனது பெயரை பார்வையாளர் மாடத்திற்கு வைத்தது தனது வாழ்வில் உணர்வுபூர்வமான தருணம் என உணர்ச்சிவசப்பட்ட விஜய் அமிர்தராஜ்*
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜ் பெயரிலான பார்வையாளர் மாடத்தினை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எழிலன், மயிலை த.வேலு, ஆர்.டி.சேகர்,பிரபாகர் ராஜா ஜெ.கருணாநிதி, ஐ ட்ரிம்ஸ் மூர்த்தி, பரந்தாமன், துணை மேயர் மகேஷ்குமார் சென்னை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,
இந்திய டென்னிஸ் உலகின் அசைக்கமுடியாத வீரராக திகழ்ந்த விஜய் அமிர்தராஜ் பெயரை வைத்துள்ளது மகிழ்ச்சி.சாதனையாளர்களை என்றுமே திராவிட மாடல் அரசு கொண்டாட்ட தவறியதில்லை.அவருடைய சாதனை எடுத்துச்சொல்லும் வகையில் பார்வையாளர் மாடத்திற்கு பெயர் வைத்ததில் பெருமை கொள்கிறோம்..
இன்று டென்னிஸ் நிறையை பேர் விளையாடுகிறார்கள் ,தொலைக்காட்சியில் காணுகிறார்கள் என்றால் காரணம் விஜய் அமிர்தராஜ் அவர்கள் தான் அர்ஜுனா விருது, பத்ம விருதினையும் பெற்றுள்ளார்கள்.
விளையாட்டு வீரராக மட்டுமல்ல ஆகச்சிறந்த மனிதராக கொண்டாட
வேண்டும். டென்னிஸ் விளையாட்டினை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறதுசெஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா, சைக்கிளத்தான், பார்முலா 4 கார் பந்தயம் என பல்வேறு சிறப்பான போட்டிகளை நடத்தியுள்ளது என்றார்.
விஜய் அமிர்தராஜ் மேடையில் பேசியது,
துணை முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துகள் , விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது முதல்வருக்கு நன்றி.விளையாட்டுத்துறையில் சிறப்பான பணிகளை மேற்க்கொண்டுள்ளீர்கள்.நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றால் நான் பெருமையாக சொல்வேன் இந்தியாவின் சிறந்த நகரான சென்னையிலிருந்து என்று.எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.இந்த நேரத்தில் பெற்றோர்களை நினைத்து பார்ப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த தமிழ்நாடு துணை முதல்வர் அவர்களுக்கு வள்ளுவர்கோட்டம் அருகிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் டென்னிஸ் விளையாட்டு மைதானம் வரையிலும் வழிநெடுக நின்ற திமுக தொண்டர்களும் பொதுமக்களும் மலர்தூவியும் மேளதாளங்கள் முழங்க ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய் அமிர்தராஜ் பேசியது,
இந்தப் பகுதியில் தான் தினமும் (லயோலா கல்லூரி,நுங்கம்பாக்கம்) காலையில் ஓடி பயிற்சி செய்வேன். எனது பெயரை பார்வையாளர் மாடத்திற்கு வைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது .எனது பெற்றோர்களை இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறேன்ல். சென்னை ஓப்பன் டென்னிஸ் இங்கு நடைபெறாமல் போனது வருத்தம் தான்.இருந்தாலும் கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தற்போது இல்லை.
டென்னிஸ் விளையாட்டை இளைஞர்கள் ஆர்வமுடன் விளையாடுகின்றனர் இனி வரும் காலங்களில் சர்வதேச அளவில் இந்திய வீரர்களின் பங்கு டென்னிஸ் போட்டியில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.














