*வாலிநோக்கம் கிராமத்தில் உள்ள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலின் தலைவராக கடந்த 7 ஆண்டுகளாக முறைகேடாக நீடிக்கும் ரஹ்மத்துல்லாஹ் என்பவர்*
*வப்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் பள்ளிவாசல் கட்ட உள்ளோம் என தெரிவித்து இந்தியா முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் பல லட்சம் ரூபாய் பணத்தை முறைகேடாக ரஹ்மத்துல்லாஹ் என்பவர் வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு*
*வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு விரைந்து தேர்தல் நடத்த வேண்டும் என வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் உறுப்பினர்கள் கோரிக்கை*
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தில் உள்ள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு உயர் நீதிமன்ற உத்தரவு படி தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
*அப்போது பேசிய ஜமாத் உறுப்பினர் முகமது அனிபா என்பவர்;*
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தில் உள்ள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு ஒன்பது வருடங்களாக ஒரே தலைவர் இருந்து வருவதாகவும், 3 வருட காலத்திற்கு ஒருமுறை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் தேர்தல் நடத்தி தலைவர் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் 9 வருடம் ஆகியும் தேர்தல் நடத்தாமல் ஒரே தலைவர் இருந்து வருவதாகவும், ஜமாத்தின் வரவு செலவு கணக்கினை பள்ளிவாசலில் ஒப்படைக்கவில்லை என்றும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் பள்ளிவாசல் கட்டப்படும் என இந்தியா முழுவதும் பல்வேறு பள்ளிவாசல்களில் பல லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லாஹ் என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்..
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டனர்… இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து பின் விசாரணை முடிவில் அடுத்த ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது… கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது வரை ஜமாத் தலைவராக நீடிக்கும் ரஹ்மத்துல்லா என்பவர் நீடித்து வருவது வக்கு வாரிய சட்டங்களுக்கு எதிரானதாகும்.
ஜமாத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தால் ஜமாத்தை விட்டு நீக்கி விடுவோம் என்று ஜமாத் தலைவர் கூறுகிறார்… இது தொடர்பாக பலமுறை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு பதிவு செய்யப்பட்ட தபாலும் ராமநாதபுரம் வக்பு வாரிய கண்காணிப்பாளருக்கு பதிவு செய்யப்பட்ட தபாலும் மற்றும் நேரிலும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவினை மீறி தேர்தல் நடத்தாமல் இருப்பது இந்திய சட்டப்படி வகுப்புவாரிய சட்டப்படியும் ஜமாத் தலைவர் பதவியில் ரஹ்மத்துல்லா நீடிப்பது முற்றிலும் தவறானது என்பதால் எனவே தமிழ்நாடு வக்பு வாரியம் வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தினை நேரடி கட்டுப்பாட்டில் எடுத்து தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.













