சிறுமியை உறவினருக்கு கட்டாயம் திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் தலைமறைவு திருமணம் செய்த இளைஞர் கைது;

0
290

சென்னை வண்ணாரப்பேட்டையில் 16 வயது சிறுமியை அவரது பெற்றோர்கள் கடந்த மே மாதம் ஆந்திராவில் உள்ள வாய் பேச முடியாத 24 வயதுடைய அகிலகுண்ட ரமேஷ் என்ற உறவினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் இதனை அடுத்து சென்னை மாவட்ட சமூக நல அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்

அப்பொழுது வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த மே மாதம் ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று உறவினர் ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது

இதனையடுத்து சிறுமியை மீட்டு திருமணம் செய்த 24 வயது அகில கொண்ட ரமேஷை கைது செய்து அவர் மீது போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டம் வழக்குகள் பதிவு செய்தனர்

இதனையடுத்து தலைமறைவாக இருக்கும் சிறுமியின் பெற்றோரை திருவொற்றியூர் போலீசார் தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here