சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி:

0
328

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நாளையில் இருந்து டிசம்பர் 31-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா பரிசோதனை கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முறையிடப்பட்டது.
இதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கோர்ட் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. கொரோனா அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் மாலை 3.00-4.00, 4.30-5.30, 6.00-7.00 ஆகிய நேரங்களில் தலா 200 வெளிமாவட்ட பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here