வேலூர் மாவட்டம் குடியாத்தம்
சுண்ணாம்புப்பேட்டை,உண்டியல் தர்மய நாயுடு தெருவில் வசிக்கும், நாராயணன் (45) என்பவர் லட்சுமி திரையரங்கம் எதிரில் இருக்கக்கூடிய அரசு மதுபான கடைக்கு பின்புறம் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அவர்களின் உத்தரவின் பெயரில் உதவிக்காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் அவ்விடத்தில் சோதனைகளில் ஈடுபட்டபோது நாராயணன் என்பவர் மது பாட்டில்கள் விற்பது தெரியவந்தது அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












