ரமேஷ் எ அமுக்கா ரமேஷ் (வயது 20) என்பவர் கொருக்குப்பேட்டை பாரதி நகர் ஹவுசிங் போர்டில் வசித்து வருகிறார் லோர்டுமேனாக பணிபுரியும் இவர் நேற்று இரவு தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு திரும்பி வரும்பொழுது எதிரே வந்த மூன்று பேர் இரும்பு ராடு மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது பின்னர் அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் உடனடியாக விரைந்து வந்த ஆர்கே நகர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சார்ந்த உதயா என்கிறவரின் தம்பி ராஜேஷின் செல்போனை இறந்துபோன ரமேஷ் திருடியதாக கூறப்படுகிறது இந்நிலையில் ஆத்திரமடைந்த உதயா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் வாக்குவாதம் முற்றவே அருகில் இருந்த இரும்பு ராடு மற்றும் கட்டை மற்றும் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் உதயா, அரவிந்தன், முஹம்மது ரசூலுல்லா, ஆகிய 3 பேரை கைது செய்து ஆர் கே நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்














