குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை;

0
409

சென்னை- புதுவண்ணாரப்பேட்டை; 10 ரூபாய் பன்னீர் சோடா வாங்கி குடித்த இரு சிறுவர்கள், ரத்த வாந்தி எடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிவுரைசிறுவர்கள் குடித்த குளிர்பானத்தை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிசோதனைக்காக சேகரித்து, கிண்டியில் உள்ள கிங் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.மேலும், சிறுவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, அதில் என்ன வகையான ரசாயனம் கலந்து உள்ளது என்பதை கண்டறிய, வேலுாரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.இந்நிலையில், சிறுவர்கள் குடித்த குளிர்பானம் விற்பனை செய்யப்பட்ட கடையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:சிறுவர்கள் குளிர்பானம் குடித்த கடையில் ஆய்வு செய்து, காலாவதியான குளிர்பானங்கள், தேதி குறிப்பிடாத குளிர்பானங்கள் மற்றும் மாவு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளோம்.சிறுவர்கள் குடித்த குளிர்பானத்தை தயாரிக்கும் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், எரா ஹல்லி கிராமத்தில் அமைந்துள்ளது.இந்த குளிர்பானத்தின் மொத்த வியாபார கடை, திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம், அலமாதியில் உள்ளது.கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கு, அந்நிறுவன குளிர்பானங்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.சென்னை மட்டுமல்லாமல், தமிழகம் முழுதும் உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெறாமல், 10 ரூபாய்க்கு குளிர்; பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த குளிர்பானங்கள் பெட்டி கடைகளில் தான், பெரும்பாலும் விற்பனை செய்யப்படுகிறது. முறையான அனுமதி பெறாத குளிர்பானம் மற்றும் உணவு பொருட்களை பொதுமக்கள் வாங்க வேண்டாம்.கைதுஉணவு பாதுகாப்பு துறை அனுமதி பெறாத பொருட்களை கடைக்காரர்கள் விற்பனை செய்ய வேண்டாம். மீறி விற்பனை செய்தால், கடை உரிமம் ரத்து செய்யப்படும்.மேலும், புதிதாக குளிர்பானமோ, உணவு பொருளோ விற்பனைக்கு வந்தால், அதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெறாத குளிர்பானங்கள் விற்பனையில் ஈடுபடும் வினியோகஸ்தர்கள் கைது செய்யப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

அலமாதி கிடங்கில் அதிகாரிகள் ஆய்வு!சர்ச்சைக்குரிய குளிர்பானம் மொத்த விற்பனை கிடங்கு, சோழவரம் அடுத்த அலமாதியில் இருப்பது தெரிய வந்ததால், நேற்று மதியம், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு, அங்கு ஆய்வு செய்தனர். அங்கு கடைகளில் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்தனர். ஆய்விற்கு பின், விற்பனைக்கு அனுப்பப்பட்ட குளிர்பானங்களை திரும்ப பெற அறிவுறுத்தப்பட்டதுடன், தற்காலிகமாக குளிர்பான வினியோகத்தை நிறுத்தவும் வினியோகிஸ்தருக்கு உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here