காணாமல் போன மனவளர்ச்சி குன்றிய சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர்;

0
246

திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த பாஷா வயது 35 இவரது மகன் ஃபெரோஸ் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் இன்று எண்ணூர் செல்லும் 4ம் நம்பர் பேருந்தில் குடும்பத்தாருக்கு தெரியாமல் வழிதவறி திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இருந்து பேருந்தில் ஏறி சென்றுள்ளான் அவனை பேருந்து நடத்துனர் ஓட்டுனர் எண்ணூர் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் நிலையில் லிப்ட்கேட் அருகே சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் புட் டெலிவரி செய்யும் பிரபு, கமலக்கண்ணன் இடம் போக்குவரத்து போலீசார் குழந்தையை ஒப்படைத்து உள்ளனர் அவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு குழந்தையை கொண்டு வந்துள்ளனர். வந்தவர்களை எண்ணூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட போலீசார் பிடித்ததால் அங்கு கொண்டு செல்ல சொல்லி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் அந்த நேரத்தில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி அவர்கள் யார் இந்த குழந்தை என்று விசாரித்துள்ளார் நடந்த சம்பவத்தை இளைஞர்கள் தெரிவிக்கவே குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து ஆய்வாளர் புவனேஸ்வரி விசாரித்து திருவொற்றியூரில் உள்ள அன்பாலயா அலுவலகத்திற்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார் இதன்பேரில் அன்பாலயா குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ரெபேக்கா எனும் பெண்மணி குழந்தையை பெற்று செல்ல வந்துள்ளார் இந்த நிலையில் தாங்கல் பகுதியிலிருந்து குழந்தையை தவற விட்ட பெற்றோர்கள் குழந்தையை பல இடங்களில் தேடி கிடைக்காத பட்சத்தில் இஸ்லாமிய அமைப்புகளுடன் திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவிக்க வந்தபோது குழந்தை உள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் எங்களுடைய குழந்தை என்று ஆய்வாளரிடம் தெரிவித்து ஆய்வாளர் புவனேஸ்வரிக்கு நன்றி தெரிவித்து குழந்தையை பெற்று சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here