காசிமேட்டில் முன்விரோதம் காரணமாக ரவுடிகள் கூட்டாளிகளுக்குள் வெட்டுக்குத்து

0
438

சென்னை காசிமேட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி மதனை கொலை செய்ய திட்டம் தீட்டி அந்த கும்பல் மதனின் கூட்டாளிகளை வெட்டியது இதன் தொடர்ச்சியாக காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியில் ரவுடிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுதொடர்பாக சென்டு காசிமேடு காவல் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட தீபக் அருண்குமார் சஞ்சய் ஜெகதீஷ் பிரபு பெரோஸ் அகமது ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதன் தொடர்ச்சியாக தப்பிச்சென்ற இருவரை தேடி வருகின்றனர் இச்சம்பவத்தின் போலவே படுகாயமடைந்த ஐந்து பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஒருவரை குறி வைத்து கொலை செய்ய வந்துவிட்டு முன்விரோதம் காரணமாக கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது காசிமேடு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற வெட்டுக்குத்து சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here