1.5 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது ;

0
361

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனையில் செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

புதுவண்ணார்பேட்டை மார்க்கெட் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாவா விற்பனையில் ஈடுபட்ட பாலசுப்ரமணியம் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் செங்குன்றம் பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக கூறியுள்ளார். செங்குன்றம் பகுதிக்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு குடோனில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதனையடுத்து குடோனில் இருந்த 50 கிலோ குட்கா மூட்டை களை பறிமுதல் செய்து பொருட்கள் தயாரிப்பதற்காக உபகரணங்களை பறிமுதல் செய்து அங்கிருந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் ஆர்.கே நகர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை,ராஜேஷ்குமார் , நடராஜன் என்பதும் சென்னை மாநகரத்திற்குள் போலீஸ் கெடுபிடி அதிகமானதால் புறநகர் பகுதிகளில் வைத்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர் .

மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் 1.5 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here