கல்லூரி மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்;

0
373

திருச்சி உறையூர் வைக்கோல்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஐஸ்வர்யாவை தேடி வருகிறார்கள்.
இதேபோல் திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டி தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சரஸ்வதி (37) கடந்த 5-ந்தேதி கட்டிட வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சரஸ்வதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்யா (23) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 5-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஆறுமுகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here