கடையின் பூட்டை உடைத்து 70 ஆயிரம் பணம் திருட்டு மிளாய் பொடியை தூவி சென்ற கொள்ளையர்கள்:

0
415

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் நடுப்பேட்டை ஆதிமூலம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஜாபர்,இவர் காந்தி ரோடு பகுதியில் சோபா கடை வைத்துள்ளார்.இந் நிலையில் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி கொண்டு சென்றுவிட்டார் இன்று காலையில் கடையைத் திறக்க வந்த ஜாபர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மிளகாய் தூள் தூவி இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் டிராயரை உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஜாபர் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் திருட்டு நடைபெற்ற கடையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் 24 மணி நேரமும் ஜனநடமாட்டம் இருக்கும் பகுதியில் திருட்டு சம்பவத்தால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது மேலும் மோப்ப நாயுடன் இருந்து தப்பிக்க மிளகாய் தூள் தூவி சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here