இன்று 25-1-2024 மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள்;தமிழ் மொழிக்காக தமிழ் மொழியை காக்க தமிழ் தீரர்கள் தங்களது உயிரை வழங்கியதன் நினைவாக வீர வணக்க நாள் அனுசரிக்க படுகிறது.
இன்று காலை 8மணியளவில் மூலகொத்தளம் மயானத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ். சுதர்சனம் MLA., வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஆகியோரின் தலைமையில்கழக மாணவர் அணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி. ஏழிலரசன் MLA, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி MP, மாணவர் அணி துணை செயலாளர் எஸ்.மோகன், ராஜீவ்காந்தி, மற்றும் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர். எம்.எம்.செந்தில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு Mc மற்றும் துணை அமைப்பாளர்கள், மண்டல குழு தலைவர்கள், மாநில கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பகுதி வட்ட அணிகளின் நிர்வாகிகள், கழக தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்













