ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை-உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை;

0
289

ஒமிக்ரான் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளது. இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒமிக்ரான் தடுப்பு மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலை 11:30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here