ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டி உண்ணாவிரத போராட்டம்,

0
507

ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டம் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் தமிழன் வடிவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜீபிடர் ரவி, பொருளாளர் நரி.அரி.கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்புச் செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா, மாநில துணை அமைப்புச் செயலாளர் பூவை நாகராஜன், மாநில துணைத் தலைவர் முத்தையா மற்றும் சங்க ஆலோசகர் அரசியல் விமர்சனம் சௌந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் தினசங்கு பிரிமியர் , ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தலைவர் செல்வம், வட சென்னை மாவட்ட தலைவர் அரசியல் அரிச்சுவடி லோகேஷ் குமார்,வட சென்னை மாவட்ட செயலாளர் கொளத்தூர் நண்பன் கார்த்திக், செங்கல்பட்டு செயலாளர் ராஜ்கமல்,கலைவாணி, இந்தியன் ரிப்போர்ட்டர் ஆசிரியரும் தயாரிப்பாளர் & நடிகருமான வராகி ,ஏனைய பத்திரிகையாளர் சங்கங்களான தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் நமது நகரம் சரவணன் மற்றும் மாநில நிர்வாகிகள், தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் நலசங்க தலைவர் மனசொலி குரு மற்றும் நிர்வாகிகள்,
தமிழ்நாடு தலைமைச் செயலக பிரஸ் மீடியா அசோசியேஷன் ஜான் செய்தி தொடர்பாளர் மற்றும் நெல்லை கலைமணி மாநில இணைச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள்,
அகில இந்திய திருவள்ளூர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் சுமித்ரா மற்றும் நிர்வாகிகள், நான்காம் தூண் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் நாற்காலி செய்தி கார்த்திகேயன்,தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் அம்ஜத் இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள், மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் அரசு மலர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு ஊடக துறையினர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில நிர்வாகி நடுவன் குரல் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள், அகில உலக பன்முனை பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில செயலாளர் முத்துக்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தலைவர் சூர்யா மற்றும் நிர்வாகிகள் மற்றும் எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் சங்கம்,ஆல்மீடியா மெம்பர் அசோசியேஷன் தங்கராஜன், நல்லாட்சி இயக்கம் ஜெயராமன், ரிப்போர்ட்டர் டுடே ஆசிரியர் சைதை சிவக்குமார், மற்றும் திருச்சி முஸ்தபா, கரூர் பாலமுருகன்,அலிபேக்,மாரி, பால்ராஜ்,பாரத மக்கள் வார இதழின் சார்பில் மகாலிங்கம், ஹரிஷ், சதீஷ்,கருணாஸ் 18 சாமுவேல், ஜெயக்குமார், செல்வம், பழனி கண்ணன் ன,மௌன புரட்சி மேலும் பல உறவுகள் கலந்துக் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தளர்வுகள் முடிந்தபிறகு பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றும் வரை தொடர் உண்ணாவிரதம் இருப்பதாகவும், நலவாரியம் அமைக்கவும் பத்திரிகையாளர் பாதுகாப்பை அரசு உறுபடுத்த வேண்டும் என்று அனைத்து சங்க நிர்வாகிகளும் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற அரசை வலியுறுத்தி பேசினார்கள்.

பத்திரிகையாளர்களை கொலை செய்வது,தாக்குவது,மிரட்டுவது போன்ற கொடிய செயல்களை சமூக விரோதிகள், மணல் மாஃபியாக்கள், குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தினந்தோறும் செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது.இந்நிலைமையை மாற்ற பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர அரசை வலியுறுத்தி பல கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் நடத்தினோம்.ஆனால் பத்திரிகையாளர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை.

அரசுக்கு கேட்கும் வகையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் சேர்ந்து உரத்த குரலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here