ஆந்திராவில் இருந்து காரில், திருப்பூருக்கு கடத்தி வந்த, 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 350 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து காரில் திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வருவதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ‘செக்போஸ்ட்’ களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில், போலீசார் கொங்கு நகர் பள்ளி அருகே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 350 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. காரை ஓட்டி வந்த, தேனி மாவட்டம் மேகமலையைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரை கைது செய்து, கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.














