சிறையில் இருந்தபடி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி;

0
403

பிரபல தொழிலதிபரை சிறையில் இருந்து விடுவிப்பதாக கூறி அவரது மனைவியிடம் இருந்து 200 கோடி ரூபாயை மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வாங்கியுள்ளார். சிறையில் இருந்தே அவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் பல மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சென்னைக்கு அருகே மிகப் பெரிய சொகுசு பங்களாவில் 20க்கும் மேற்பட்ட கார்களுடன் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து உள்ளார். ‘ரான்பாக்சி’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்தவர் பிரபல தொழிலதிபர் சுக்விந்தர் சிங். பண மோசடி வழக்கில் 2019ல் அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஜாமின் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அவரது மனைவி அதிதி சிங்குடன் மொபைல் போனில் பேசி பல தவணைகளில் 200 கோடி ரூபாயை சுகேஷ் சந்திரசேகர் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது: தன் கணவருக்கு ‘ஜாமின்’ கிடைப்பதற்காக அதிதி சிங் முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் மத்திய உள்துறை செயலர் சட்டத் துறை செயலர் என முக்கிய அதிகாரிகளின் பெயரில் சுகேஷ் அவரிடம் பேசிஉள்ளார்.
ஜாமின் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்வதாக அவர் கூறி அதிதி சிங்கை நம்ப வைத்துள்ளார். அதிதியின் சகோதரி அருந்ததி கன்னாவும் பேசியுள்ளார். முதலில் மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய சகோதரிகள் ஒரு கட்டத்தில் சந்தேகம் அடைந்தனர். அதை புரிந்து கொண்ட சுகேஷ் அவர்களை மிரட்டவும் செய்துள்ளார்.
இதற்கிடையே இந்த விவகாரம் அமலாக்கத் துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து மொபைல் போனில் வரும் அழைப்புகளை பதிவு செய்யும்படி அதிதிக்கு அறிவுறுத்தினர். அதன்படி 84 அழைப்புகளை அதிதி பதிவு செய்துள்ளார். அவற்றை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்த அனைத்து அழைப்புகளையும் சிறையில் இருந்தே சுகேஷ் செய்துள்ளார். அதே நேரத்தில் குறிப்பிட்ட அதிகாரிகளின் உண்மையான தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பது போல் மோசடி செய்துள்ளார். உண்மையில் இந்த விவகாரத்தில் எந்த அதிகாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களது பெயர்களை பயன்படுத்தி சுகேஷ் மோசடி செய்து 200 கோடி ரூபாயை பறித்துள்ளார். இவ்வாறு கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here