-
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சாத்தான்குளத்தில் தனது பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 98 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான திருமிகு_கனிமொழி கருணாநிதி_எம்பி அவர்கள்
உடன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான திரு.அனிதா இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், ஒன்றிய செயலாளர் திரு.ஜோசப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்















