வேலூர் மாவட்டம்,பள்ளிகொண்டா, காவல் ஆய்வாளர் கருணாகரன் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்ற போது வாகனம் நிற்காமல் சென்றதால் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 20 பெட்டிகளில் சுமார் 495 கிலோ எடை கொண்ட குட்கா இருந்தது தெரிய வந்தது, இதன் மதிப்பு சுமார் ₹-3,08,660/-மேலும் குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநர் செல்வராஜை கைது செய்தனர்.














