சிஎம்சி மருத்துவ கல்லூரியில் 50 இடங்கள், தனலட்சுமி, வெங்கடேஸ்வராவில் தலா 75 அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டில் 565 மாணவர்கள் சேர உள்ளனர். 7.5 % இட ஒதுக்கீட்டில் சேரும் 565 மாணவர்களின் படிப்பு கட்டணத்தை அரசே ஏற்கும். மருத்துவ படிப்பில் கூடுதலாக 200 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். மொத்த இடங்கள் 10,825-ஆக உயர்ந்துள்ளன. மருத்துவ படிப்புக்கான பாடநூல்கள் அடங்கிய மடிக்கணினிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
















