தமிழகம், கேரளாவில் ரூ.5,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கோவையை சேர்ந்த கும்பல் தலைவனின் அலுவலகத்தில் கேரள போலீசார் சோதனை நடத்தினர்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கவுதம் ரமேஷ், 40. இவரது தலைமையில், ஒண்டிபுதுாரை சேர்ந்த பிரவீன்குமார், 30 உள்ளிட்ட, 15 பேர் சேர்ந்து பீளமேடு பகுதியில் யூனிவர்சல் டிரேடிங் சொல்யூசன் – யு.டி.எஸஅ., எனும் நிதி நிறுவனத்தை துவங்கினர். இதன் கிளையை நிறுவனங்களை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களிலும் நடத்தினர்.
இந்நிறுவனத்தில், 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 10 சதவீதம் வட்டியும், 10 மாதங்களுக்கு பின் முதலீட்டு தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார். இதை நம்பி, இவர் நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், 20 ஆயிரம் பேரிடம், 1,200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தனர். கேரளாவிலும், 3,800 கோடி ரூபாய் வரை வசூலித்தனர். கடந்த ஆண்டு, இவர்கள் தலைமறைவான நிலையில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள இவரின் நிறுவனத்தை முதலீடு செய்த மக்கள் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகிய கவுதமை தனிப்படை அமைத்து தேடிவந்தனர். கேரளாவிலும் இவர் மீது வழக்கு பதிவு செய்து கேரள காவல்துறையினர் இவரை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கவுதம் ரமேஷ், பிரவீன்குமாரை கடந்த, 12 ம் தேதி தனிப்படை போலீஸார் சேலத்தில் கைது செய்தனர்.
தொடர்ந்து கேரள போலீசார், டி.எஸ்.பி., சியாம்ஸ் தலைமையில் சேலத்தில் கைதான கவுதமை கோவைக்கு அழைத்து வந்தனர். பீளமேட்டில் உள்ள அவரது நிறுவனத்தில் சோதனை செய்தனர். மூன்று மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனையில், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து கவுதமை, விசாரணைக்காக கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.
டி.எஸ்.பி., சியாம்ஸ் கூறுகையில்,”சோதனையில், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும்













