மீஞ்சூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம்;

0
307

திருவள்ளூர் -ஜன.31 திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது ,மீஞ்சூர் நகரம்,மீஞ்சூர் தெற்கு ஒன்றியம், மீஞ்சூர் நடுவன் ஒன்றியம் மற்றும் மீஞ்சூர் மேற்கு ஒன்றியம் ஒருங்கிணைந்து நடத்தும் கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சே.வினோத் பாபு தலைமை வகித்தார், தொகுதி தலைவர் மா. பாரதிராஜா,இணை செயலாளர் லோ. சத்யராஜ், துணை செயலாளர் தினேஷ்குமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்,தொகுதி செய்தி தொடர்பாளர் ஜாக் (எ)சரவணன், அனைவரையும் வரவேற்றார்,இதில் சிறப்பு அழைப்பாளராக சிறப்புரையாற்ற மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மணலி இடி முரசு, பொன்னேரி தொகுதி கொள்கை பரப்பு செயலாளர் மா.கோபி, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியினால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை எனவும், இதுவரையில் மீஞ்சூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணிகள் கட்டி முடிக்காத நிலையில் பெரிதும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர், சீர் குலைந்த திருவொற்றியூர் நெடுஞ்சாலை சீரமைக்க வில்லை, மீஞ்சூர் பஜார் பகுதியில் வியாபாரிகளுக்கு ஒரு பொது கழிப்பிடம் வசதி கூட ஏற்படுத்தாத நிலையில் தான் ஆட்சி நடக்கின்றது என குறை கூறி பேசினர், இதில் வடசென்னை மண்டல செயலாளர் வழக்கறிஞர் ரா.கோகுல், காட்டுப்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி கடலி, உள்ளிட்ட திரளான நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், இறுதியில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பொ.கு. கோபாலகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here