பள்ளிப்பட்டு அருகே ஆந்திரா நகரி தொகுதியில் வெடி விபத்து..தமிழக பஸ் மீது கற்கள் விழுந்தன;

0
304

ஆந்திரா மாநிலம் நகரி தொகுதி.அங்கு MLA-வாக இருப்பவர் திருமதி.R.K.ரோஜா அவர்கள்.ஆந்திரா நகரியில் இருந்து திருத்தணி செல்லும் வழியில் நகரி பைபாஸ் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் V.K.S திருமண மண்டபம் எதிரில் 2-ஏக்கர் மலைப்பகுதியில் பெட்ரோல் பங்கு வைப்பதற்காக நகரி தொகுதி MLA திருமதி.ரோஜா உறவினர்களுக்கு சொந்தமானதாக கூறப்படுகிறது.அந்த இடத்தில் தூய்மை பணிகள் நடந்து கொண்டு இருந்தன.04.12.2020 அன்று பட்டபகலில் மதியம் 3-மணி அளவில் மலைப்பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டன.வெடி வெடித்ததும் மலைப்பாறைகள் சிதறி தூக்கி எறியப்பட்டன.பாறைகள் சுமார் 500-மீட்டர் தூரம் பறந்து சென்றன.அதே நேரம் காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி வழியாக நகரி புத்தூர் திருப்பதி செல்லும் தனியார் பாரதி பஸ் சர்வீஸ் பயணிகளை ஏற்றிக்கொன்டு வந்தது.100-அடி தூரத்தில் வெடி வைப்பதாக கூறி தடுத்து நிறுத்தப்பட்டது.ஆனாலும் எதிர்பாராத விதமாக பாறைகள் பறந்து சென்று ( AP O3-TF2700 ) என்ற பாரதி பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே பாய்ந்தது.ஜன்னல்கள் வழியாகவும் கற்கள் விழுந்து பயணிகள் மீது தாக்கின.இதில் ஒரு முதியவர் காலில் படுகாயம் மற்றும் சிலர் காயம் அடைந்தனர்.மேலும் 500-மீட்டர் தொலைவில் உள்ள B.C.காலனியிலும் வீடுகள் மீதும் கற்கள் விழுந்தன.இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த சம்பவம் ஆந்திரா நகரி தொகுதி முழுவதும் பரபரப்பு செய்தியாக உள்ளது.இந்த சம்பவம் திட்டமிட்ட செயல் இல்லை என்றாலும் வெடி வைத்த இஞ்சீனியர்களின் அஜாக்கிரதையே காரணம் ஆகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here