பயணி தவறவிட்ட விலை உயர்ந்த செல்போனை பேருந்து பணிமனையில் ஒப்படைத்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ;

0
99

மீஞ்சூர் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் வரை செல்லக்கூடிய தடம் எண் 56/P என்ற மாநகரப் பேருந்தில் பயணி ஒருவர் சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஓப்போ செல் போனை மீஞ்சூரை அடுத்த பட்ட மந்திரி என்ற இடத்தில் பேருந்தில் இருக்கையில் செல்போனை தவற விட்டு சென்றுள்ளார்.பேருந்து நடத்துனர் சங்கர் மற்றும் ஓட்டுநர் பால்ராஜ் இருவரும் பயணி தவறவிட்ட செல்போனை எடுத்துக்கொண்டு தண்டையார்பேட்டை பணிமனையில் ஒப்படைத்தனர்.இதனை அடுத்து பயணித்தவறிவிட்ட செல்போனில் இறுதியாக பேசிய செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு கிளை மேலாளர் பேசி தகவல் தெரிவித்துள்ளார்.
லால்குடி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கஜேந்திரன் இவர் தண்டையார்பேட்டை ஐஓசி எண்ணெய் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது இதனை அடுத்து செல்போன் ஆவணங்களை சரி பார்த்து லாரி ஓட்டுனர் கஜேந்திரன் பணிமனையில் ஒப்படைதனர்பேருந்து பயணி தவறவிட்ட விலை உயர்ந்த செல்போனை பேருந்து பணிமனையில் ஒப்படைத்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை பேருந்து பணிமனை மேலாளர் லோக் சந்தர் பாராட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here