சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் வசிக்கும் சீனு என்பவர் நேற்று தனது வீட்டில் இருந்த பொழுது அவருடைய நண்பர் லோகேஷ் மற்றும் கார்த்தி என்பவர் நண்பர்களுடன் பேச வேண்டும் வா என்று அழைத்து சென்றதாக கூறப்படுகிறது
இந்நிலையில் சீனு ஆறு பேருடன் சென்றதாகவும் இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் வீட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ள அனைத்தும் இடங்களிலும் தேடி பார்த்த பொழுது திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே தடம் அருகே இரண்டு கால்களும் தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்
இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த சென்னை கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலைய அதிகாரிகள் உடலை கைப்பற்றி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
சீனுவின்மீது சாத்தாங்காடு காவல்நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தற்பொழுது திருந்தி வாழ எண்ணி காவல் நிலையத்தில் பிணைய பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் செல்லாமல் கடந்த நான்கு மாத காலமாக திருந்தி வாழ்ந்து வந்த நிலையில் இன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
மேலும் ரயில்வே தடம் அருகே வெட்டப்பட்டு போடப்பட்டதால் ரயிலில் அடிபட்டு இறந்ததாக ஜோடிக்கப்பட்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
















