சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை ஒட்டி காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பெயரில் ஆங்காங்கே தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட வந்தநிலையில்
வண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக நுண்ணறிவு பிரிவு காவல் துறையின் மூலமாக தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் ஒரு வீட்டில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் பதுக்கி வைத்து கணவன் மனைவி உட்பட இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்ட பொழுது அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கர்ணன் குமுதவல்லி மற்றும் ராஜேஷ் ஆகாஷ் சங்கர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்