ஸ்டான்லி மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை சுகாதாரதுறை அமைச்சர் பார்வையிட்டார்;

0
335

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை சுகாதாரதுறை அமைச்சர் பார்வையிட்டார்
ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறும் சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவ முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்
மருத்துவ பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட அனைவரும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு எக்ஸ்ரே சிடி ஸ்கேன் உள்ளிட்ட அனைத்தையும் பரிசோதனை செய்து குணமடைவதற்கு மருத்துவம் அளிக்கின்றனர் ஆனால் ஒருபோதும் தங்களை அவர்கள் சோதனை செய்துகொள்வதில்லை என்பதனால் சுகாதார பணியில் ஈடுபடும் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யும் விதமாக ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் உள்ள வளாகத்தில் பரிசோதனை மையம் நடத்தப்பட்டு வருகிறது இதில் சுகாதார துறை பணியில் ஈடுபடும் அனைவரும் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையின் பின் பாலாஜி மற்றும் மருத்துவமனையில் முன்னணி மருத்துவர்கள் செவிலியர்கள் பலரும் கலந்து கொண்டனர்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது சுகாதார பணியில் முழு அர்ப்பணிப்போடு பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் துணை மருத்துவர்கள் என அனைவரையும் பாதுகாக்கும் முன்னிட்டு சுகாதார பணியாளர்கள் பரிசோதனை முகாமை தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்
இதில் பிபி சுகர் இசிஜி சிடி ஸ்கேன் கேன்சர் மற்றும் பெண்களுக்கான மார்பக புற்று நோய்க்கான பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் ஒரே இடத்தில் செய்யப்பட்டது
மேலும் இதுவரையில் தமிழ்நாடு முழுவதும் 46 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
தற்பொழுது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் குர்ஆன் நோய்த்தொற்று குறைந்து கொண்டே வருகிறது மேலும் இது குறைந்து கொண்டே தான் வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது இதற்கு மக்கள் தான் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறியவர் நோய் தொற்று அதிகரித்த நேரத்தில் எப்படி பாதுகாப்பாக இருந்தார்களோ அதே போன்று தற்பொழுது குறைந்து வரும் சூழலில் கட்டாயம் முக கவசம் தனிமனித இடைவெளி கைகழுவுதல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும் எனறும் இதனை அனைவரும் சரிவரக் கடைப்பிடித்தால் தமிழ்நாட்டில் குரவையும் முற்றிலும் துரத்தி விடலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்
இந்நேரத்திலும் பொதுமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் பண்டிகை காலத்தில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்
காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் பொதுமக்கள் கூட்டம் கூடுவது கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

தமிழகத்தில் இதுவரை 58 ஆயிரம் பேர் தன்னார்வலர்கள் தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொண்டு இருப்பதாகவும் அதில் ஒருவருக்கு கூட பின்விளைவுகள் ஏற்பட வில்லை என்றும் தெரிவித்தார்
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை மற்ற தீர்மானங்கள் ஒப்பிட வேண்டாம் என்றும் விரைவில் ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here