சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது; 10 கிலோ கஞ்சா பறிமுதல்;

0
418

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த தனிப்படை போலீசார், 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

வடசென்னையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில் இணை ஆணையர் தலைமையிலான ரகசிய தனிப்படை போலீசார் சாத்தாங்காடு சண்முகபுரத்தில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த சண்முகம் மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் இருவர் மீதும் ஏற்கெனவே கஞ்சா கடத்தியது, கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.விசாரணையில் ஊத்துக்கோட்டை சேர்ந்த சிவா என்பவர் சண்முகம், சரவணன் ஆகியோர் மூலம் அயனாவரத்தை சேர்ந்த ரமா என்பவருக்கு மொத்தமாக கஞ்சா விநியோகம் செய்து வருவது தெரிய வந்துள்ளதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here