ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்?

0
139

*1.* முதலில் பவர் *of* அட்டெரனி அதாவது *power* யில் வரும் நிலத்தை வாங்காதீர். இது *double* டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.

*2.* அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, *layout* பிளாட் ஆஹ் என்று பாருங்கள்?.

*DTCP approved* *or* *CMDA* *approved* என்றால் *DTCP & CMDA* website யில் *approval* நம்பர் போட்டு *approval* ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம்.

நத்தம் நிலம் என்றால் *VAO* வை பார்க்க வேண்டும்.

*3.* *EB* , சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.

*4.* பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும். ஏன்னா பட்டா வாங்குறது பெரிய *process* & கஷ்டம்.
அதனாலே, விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள்.

*5.* நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, *park,* விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா ,etc.என்று பார்க்கிவேண்டும்.

*6.* *பட்டாவின் பயனாளி யார்?* *Assigment land* *(HSD land DC land, தச்சு மானியம், வண்ணார் மானியம்)* ராயட்டு வாரி, பூமி தான நிலமா, ஜமீன் இனாம் நிலமா, கோயில் *land* ஆஹ் என்று பார்க்க வேண்டும்.

*7.* அடுத்த *step* , அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம *VAO* கிட்ட அந்த நிலத்தோட *FMB* , பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.

*8.* அடுத்து *VAO* கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க *.i e.,* பிற்காலத்தில் *govt project* க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.

அவர் *(VAO)* டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,

*7.* மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் *copy* வேண்டும் என்று *VAO office* மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது *RTI* யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள் *.(கண்டிப்பாக attest copy வேண்டும் )*

*9.* அடுத்து நிலத்தின் SLR, RSLR A- Record ஒரு 60 to 80 வருடத்திற்கு வேண்டும்.OSR, *RSR* *A-Record* எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.

இதன் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால் அது வெள்ளைக்காரன் காலத்தில் *DC* land நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.

*10.* அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு *confirm* *(உறுதி )* பண்ணிக்கணும்.

*12..* அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையாக ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று *confirm* பண்ணுங்க.

*13.* அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள்?.இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா, தற்போதைய *owner* யார் என்றும் கேளுங்கள்

*14.* அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர்க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்

*15.* அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின் ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் *lawyer* பாருங்கள்.

*16.* எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு *govt* *registered surveyor* பாருங்க. அவர் நிலத்தை அளந்து, *encroachment, deviation* எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.

*17.* தயவு செய்து டாக்குமெண்ட் *writer* வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற *license govt 1990களில்* இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.

பாதி பேர் 10வது தாண்டதவர் . எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து *copy paste* செய்கிறார்கள். உங்களுக்கு என்று *draft* செய்வது குறைந்த நபர்களே.

நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள். நல்ல லாயர் கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

நாம் டாக்குமெண்ட் வேண்டி *govt* ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே.அதனாலே அலுத்துக்கொள்ளதீர்.

நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.

அடுத்து லாயர், *surveyor consulting,* விற்பவர் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர் குடி இருக்கும் வீடு காட்டபட்டுள்ள நத்தம் *FMB, UDR* காலத்து சிட்டா அடங்கல், *A record, plotted layout,*
british காலத்து *SLR A -Record* இவைகளின்.படித்து,பார்த்து பயன் பெறுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here