சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அருகில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) சார்பாக அரசு மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன்
எங்களது முக்கிய அம்ச கோரிக்கைகளாக
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் 2009ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசு ஆணை 354 மறுசீராய்வு செய்து ஊதிய பட்டை 4ஐ 13வது ஆண்டில் வழங்கிட வேண்டும்
ஆரம்ப சுகாதார மருத்துவ நிலைய மருத்துவர்களுக்கு படித்தொகை ரூ.3000 உடனடியாக வழங்கிட வேண்டும்
அரசு ஆணை 4 (D) மூலம் நீக்கப்பட்ட 1500 -க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி பதவிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்திட வேண்டும்.
சராசரியாக 8 லட்சம் நோயாளிகளுக்கு 80 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும் ஆனால் 20000 மருத்துவர்கள் உள்ளனர் போர்க்கால அடிப்படையில் 20 ஆயிரத்து ஒருவரை நியமித்திட வேண்டும்.
எங்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் 2019 போல் நாங்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இடம் :ராஜரத்தினம் மைதானம் எழும்பூர்*. 01.06.2025 நிருபர் ..விக்னேஷ்












