வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற கங்கை அம்மன் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் வருகின்ற 15ஆம் தேதி கங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் நிலையில்
தினம் தோறும் கங்கை அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோயிலில் இருந்து வரும் இந்துக்களுக்கு கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் துண்டு பிரசுரங்களை வழங்கி கிறிஸ்துவர்களாக மதம் மாற கூறுவதாக வந்த தகவலை அடுத்து
இந்து அமைப்பை சார்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் கங்கை அம்மன் ஆலயம் அருகே துண்டு பிரசுரங்களை வழங்கி வந்த கிறிஸ்தவ அமைப்பினரிடம் இந்து கோயிலில் நோட்டீஸ் வாங்க கூடாது என அறிவுறுத்திருந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்து வந்த குடியாத்தம் போலீசார் கிறிஸ்துவ அமைப்பினரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்
இதில் போலீசார் கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும் கிறிஸ்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் தமிழக முழுவதும் இந்து அமைப்பு மூலம் குடியாத்தம் நகர காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ் பி மதிவாணன் அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளலர் பத்மநாபன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
















