





சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி, 13வது வட்ட திமு கழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, 8-12-2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1மணியளவில், சாத்தாங்காடு சேஷாசலா கிராமணி தெரு சாத்தாங்காடு பகுதியில் , தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் புடவை, வேஷ்டி சர்ட் மற்றும் மாபெரும் அன்னதானம் அறுசுவை உணவு பிரியாணி மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் .ரா.சுசிலாராஜா Mc 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் வரவேற்புரையாற்றினார் 13வது வார்டு வட்ட கழக செயலாளர் கேபிள் டிவி திரு.எம்.ராஜா அவர்களின் ஏற்ப்பாட்டில் புதிய கல்வெட்டினை திறந்து வைத்து , கழக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை மதிய உணவு பிரியாணி ஆகியவற்றை வழங்கியவர் : சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் மாதவரம் திரு.எஸ்.சுதர்சனம் MLA மற்றும் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர், மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் திரு.தி.மு.தனியரசு புதிய கல்வெட்டினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அறுசுவை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், மாவட்ட பொருளாளர் ஆனந்தன், கிழக்கு பகுதி துணை செயலாளர் எம்.வீ.குமார், பொருளாளர் இரா.குமரேசன், வட்ட கழக செயலாளர்கள் தா.கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.பாஸ்கர், ஒய்.நந்திவர்மன், பி.எஸ்.சைலஸ் ம.ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.ராஜ், திருவொற்றியூர் கிழக்கு பகுதி துணை செயலாளர் கே.பிரபாவதி, மாவட்ட பிரதிநிதி ஆர்.ரஜினி பாபு, கே.கார்த்திகேயன், அவைத்தலைவர் அ.மதிவாணன், துணை செயலாளர் எஸ்.முத்துராஜ்,கே.ஜானகிராமன், எஸ்.விஜயலட்சுமி, பொருளாளர் ராஜன் சாமிநாதன் , பகுதி பிரதிநிதி ஏ.சுந்தர்ராஜ், டி.கே.பசுபதி, டி.கதிரவன், ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆர்.டில்லி டி எஸ் பிரசாத் கேட்டரிங் மாணிக்கம் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பகுதி வட்ட அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் நிர்வாகிகள்,பாக-முகவர்கள், கழக தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அடுத்து எம்.மனோகரன் பகுதி பிரதிநிதி நன்றி உரையாற்றினார்..
















