வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்;

0
2033

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமோ_

_*ஆம் ஒவ்வொரு நாளும் போர்க்களம் போன்று பிரச்சனைகள் தோன்றும் ஒரு நாள் அதிகமாகும் ஒரு நாள் குறையும் ஒரு நாள் காணாமல் போகும்*_

_பிரச்சனைகள் உள்ளது என்று வாழ்க்கையை வெறுத்த மனிதன் வாழ்வதற்கு இயலாது_

 

_*வாழ்க்கை கற்றுத் தந்த பாடம்*_
_*நம் எல்லோருக்கும் அளவே இல்லாமல் நிறைய இருக்கும்.*_

_பிரச்சினை பெரிதோ சிறிதோ அது எப்படி இருந்தாலும் சரி அந்த நேரத்தில் நம் மனதை மிகவும் அமைதியாக வைத்திருக்க வேண்டும்._

_*அப்பத் தான் எந்த மாதிரி பிரச்சனையில் நாம் இருக்கிறோம் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதே நமக்குப் புரியும்.*_

_அந்த பிரச்சனை சரி ஆக ஒரு நாள் இல்லை ஒரு மாதம் இல்லை பல வருடங்களே ஆனாலும் பொறுமையாகக் கையாள வேண்டும்._

_*அதாவது வாழ்க்கைஎன்பது இடியாப்பம் மாதிரி எண்ணற்ற சிக்கல்களுடன்தான் இருக்கும்.*_

_ஆனால் தைரியமாக வாழ்ந்தால்_
_அதுவே இனிப்பாக இருக்கும்._

_*ஆகையால் பொறுமையான மனதும் நிதானமான செயலும்*_

_இது தான் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துத் தரும் என்பதை புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்._

_*வாழ்க்கை வாழ்வதற்கு என்று அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்க்கை வாழ்வதற்கே என எதிர்நீச்சல் போடுபவனே சிறந்த மனிதனாவான்*_

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here