உணவுப் பொருட்கள் வழங்காமல் அலைகழிப்பு பொதுமக்கள் ரேஷன் கடையை, முற்றுகையிட்டனர்;

0
169

வண்ணாரப்பேட்டை ஆரணி கங்கன் தெருவில் வடசென்னை கூட்டுறவு பண்டகசாலையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடை உள்ளது.
இந்த ரேஷன் கடையில் ஆரணி ரங்கன் தெரு, ஆரணி கங்கன் சந்து ஆரணி ரங்கன் சந்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது .
மேற்கண்ட கடையில் ஒவ்வொரு மாதமும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு சரியான முறையில் உணவு பொருட்கள் விநியோகிப்பது இல்லையாம்.
பொதுமக்களை தினந்தோறும் அலைகளித்து வருகிறார்கள்.
இது குறித்து இக்கடையில் பில் போடும் சீனிவாசன் என்பவர் கடைக்கு வர பொதுமக்கள் இடத்தில் தரைக்கு உருவாக பேசுவது பொதுமக்களிடத்தில் பொருள்கள் காலியாகிவிட்டது. இன்னைக்கு இல்ல நாளைக்கு இல்ல நாளைக்கு வா அப்படின்னு தினம் அளக்களித்ததால் கோபம் அடைந்த பொதுமக்கள் பலமுறை உயர் அதிகாரியிடம் சீனிவாசனை பற்றி புகார் தெரிவித்துள்ளனர்.
அதற்கு உயர் அதிகாரிகள் சீனிவாசனை நேதாஜி நகர் உள்ள வேறு ஒரு ரேஷன் கடைக்கு இடம் மாற்றுதல் செய்துள்ளனர் .
ஆனாலும் சீனிவாசன் அங்குள்ள கடைக்கு செல்லாமல் தொடர்ந்து அதே ரேஷன் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த மாதத்திற்குரிய உணவுப் பொருட்கள் அப்பகுதியில் வாழும் பொது மக்களுக்கு ஏராளமானவருக்கு இதுவரை வழங்கப்படவில்லையாம்.
இந்நிலையில் நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன் கடை முன் திரண்டு இந்த மாதத்திற்குரிய உணவுப்பொருட்கள் வழங்குமாறு கேட்டுள்ளனர் .
அதற்கு சீனிவாசன் பொருட்கள் இல்லை நாளை வாருங்கள் என்று மீண்டும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ரேஷன் கடை முற்றுகையிட்டு கோஷம் இட்டனர் .
தகவல் அறிந்து கொருக்குப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர் இதனால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here