தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு;

0
271

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

*தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:*

– திண்டுக்கல் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த *உதயகுமார்* மதுரை மாநகர கட்டுப்பாட்டு மைய துணை கமிஷனராகவும்,

– சிவகங்கை மாவட்டம் மயிலாடுதுறை டிஎஸ்பியாக இருந்த *கண்ணன்* திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும்,

– திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த *ரமேஷ்* மதுரை நகர தெற்கு உதவி கமிஷனராகவும்,

– திண்டுக்கல் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாக இருந்த *செந்தில்குமார்* விழுப்புரம் மாவட்டம் செஞ்சி டிஎஸ்பியாகவும்,

– புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பியாக இருந்த *பால்ராஜ்* திண்டுக்கல் மாவட்டம் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும்,

– சிவகங்கை டிஎஸ்பியாக இருந்த *சிபி சாய் சவுந்தரியன்* திண்டுக்கல் டிஎஸ்பியாகவும்,

– மதுரை மாவட்டம் பேரையூர் டிஎஸ்பியாக இருந்த *இலக்கியா* திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் டிஎஸ்பியாகவும்,

– திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் டிஎஸ்பியாக இருந்த *துர்கா தேவி* மதுரை மாவட்டம் பேரையூர் டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

– திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த *சீனிவாசன்* கோபிசெட்டிப்பாளையம் டிஎஸ்பியாகவும்,

– திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாக இருந்த *முத்துகுமரன்* ஈரோடு டவுன் டிஎஸ்பியாகவும்,

– ஈரோடு டவுன் டிஎஸ்பியாக இருந்த *ஜெய்சிங்* கிருஷ்ணகிரி மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையம் டிஎஸ்பியாகவும்,

– கோபிசெட்டிப்பாளையம் டிஎஸ்பியாக இருந்த *தனகவேல்* ஈரோடு மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும்,

– திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டிஎஸ்பியாக இருந்த *கலையரசன்* புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பியாகவும்,

– நாமக்கல் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த *மனோகரன்* தருமபுரி மாவட்டம் பாலகோடு டிஎஸ்பியாகவும்,

– தருமபுரி மாவட்டம் பாலகோடு டிஎஸ்பியாக இருந்த *சிந்து* திருவள்ளூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

– திருநெல்வேலி சிபிசிஐடி டிஎஸ்பியாக இருந்த *சிவக்குமார்* கோவை மாவட்டம் பேரூர் டிஎஸ்பியாகவும்,

– திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டிஎஸ்பியாக இருந்த *பார்த்திபன்* கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை டிஎஸ்பியாகவும்,

– திருநெல்வேலி நகர குற்ற ஆவணக் காப்பக உதவி கமிஷனராக இருந்த *சந்திரசேகரன்* ஈரோடு மாவட்டம் பவானி டிஎஸ்பியாகவும்,

– கோவை கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பியாக இருந்த *சுரேஷ்குமார்* திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டிஎஸ்பியாகவும்,

– ஈரோடு மாவட்டம் குற்ற ஆவணக் காப்பகம் டிஎஸ்பியாக இருந்த *ஆறுமுகம்* திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை டிஎஸ்பியாகவும்,

– திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை டிஎஸ்பியாக இருந்த *சுகுமாரன்* திருவாரூர் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும்,

– புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாக இருந்த செந்தில் *இளந்திரையன்* மதுரை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும்,

– ஈரோடு மாவட்டம் பவானி டிஎஸ்பியாக இருந்த *அமிர்த வர்ஷினி* விழுப்புரம் மாவட்டம் சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும்,

– நாமக்கல் மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த *வின்சென்ட்* திருச்சி மாவட்டம் சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும்,

– கோவை மாவட்டம் சிவில் சப்ளை டிஎஸ்பியாக இருந்த *ஜனனி பிரியா* காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

– திருச்சி மாவட்டம் மணப்பாறை டிஎஸ்பியாக இருந்த *மாரிமுத்து* கோவை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும்,

– தஞ்சை மாவட்டம் வல்லம் டிஎஸ்பியாக இருந்த *நித்யா* தஞ்சை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும்,

– திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பியாக இருந்த *சரவணகுமார்* சென்னை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும்,

– காத்திருப்போர் பட்டியலில் இருந்த *சுரேஷ்குமார்* நாமக்கல் மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும்,

– திருவாரூர் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த *பாஸ்கரன்* திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பியாகவும்,

– திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பியாக இருந்த *சரவணக்குமார்* சென்னை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும்,

– அரியலூர் மாவட்டம் குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த *தமிழ்மாறன்* திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பியாகவும்,

– திருத்துறைப்பூண்டி டிஎஸ்பியாக இருந்த *சோமசுந்தரம்* தஞ்சை நகர டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு டிஜிபி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here