மூன்று ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழி;

0
159

சென்னை,புளியந்தோப்பு, சிவராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் முருகன்(41) இவர் மேளம் தயாரிக்கும் தொழில் பார்த்து வந்தார். நேற்று முன் தினம் மாலை இரண்டாவது மாடியில் முருகன் இருந்தார். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் மேளம் வாங்க வந்ததாக முருகனை சந்தித்து பேசினர். அப்போது திடீரென அந்த கும்பல் முருகனிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக அரிவாளில் வெட்டிவிட்டு தப்பினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உயிருக்குப்போராடிய முருகனை காப்பாற்றி சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். பேசின் பாலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, முருகன் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இந்த நிலையில் நேற்று இந்த கொலை வழக்கு தொடர்பாக கொண்டித்தோப்பு, பேசின் பாலம் பகுதியை சேர்ந்த வேலு,பிரபா,முனியன், காண்டீபன்,முருகன், வசந்த் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அதில் 2021 ஆம் ஆண்டு முருகன் அவரது கூட்டாளிகளுடன், கொண்டித்தோப்பு முருகனை அடித்து கொன்றனர். இதற்கு பழிவாங்க இறந்த முருகன் கூட்டாளிகள் இந்த முருகனை கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here