பீச்சில் குதிரை சவாரி ரவுடிகளை வெட்டிய வழக்கில் ஒரு பெண் உட்பட ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

0
188

பீச்சில் குதிரை சவாரி ரவுடிகளை வெட்டிய வழக்கில் ஒரு பெண் உட்பட ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

திருவல்லிக்கேணி கெணால் தெருவை சேர்ந்தவர்கள் பாபு(28) இவருடைய தம்பி தீனா(26) இருவரும். மெரினா பீச்சில் குதிரை சவாரி செய்யும் வேலை செய்து வருகிறார்கள் இவர்கள் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்நிலையில் நேற்று பாபு அவருடைய மனைவி அமுதா தம்பி தீனா அவருடைய மனைவி அனிதாவுடன் பூக்கடை பகுதியில் உள்ள கடைக்குச் சென்று அவர்கள் வீட்டிற்கு தேவையான காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி எடுத்துக்கொண்டு பின்னர் டிஎன்பிசி சாலை வழியாக சென்று அங்கிருந்த ஒரு ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர் இவர்களை பின் தொடர்ந்து வந்த ஆட்டோ மற்றும் பைக்கில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இவர்களை வழி மறைச்சி தகராறில் ஈடுபட்டு வந்தனர் தகராறு முத்தி கைகலப்பானதும் நான்கு பேர் கொண்ட கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாரமாதியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் காப்பாற்றி அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி மேலும் சம்பவம் குறித்து பூக்கடை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் புழல் சிறையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றதாகவும் தப்பி ஓடிய ஆறு பேரை போலீசார் தேடி வந்த நிலையில்
இது குறித்து தீனாவின் மனைவி அமுதா C-1 பூக்கடை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.C-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்த மேற்படி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.கௌதம்(24), த/பெ.சீனிவாசன். ஏ பிளாக், 6 வது தெரு, காந்தி நகர், பல்லவன் சாலை, சென்னை 2.கபாலி (எ) வெங்கடேசன், (22), த/பெ.சீனிவாசன். ஏ பிளாக். 6 வது தெரு, காந்தி நகர். பல்லவன் சாலை, சென்னை 3.அலமேலு, (20), க/பெ. கபாலி (எ) வெங்கடேசன் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். மேலும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 இளஞ்சிறார்களும் பிடிப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்ததில் பாபு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்த போது, உடனிருந்த மேற்படி கௌதமின் அண்ணன் மோகன் என்பவரை தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கௌதம் தனது உறவினர்களுடன் சேர்ந்து பாபு மற்றும் அவரது உறவினர் தீனாவை கத்தியால் தாக்கியுள்ளது தெரியவந்தது.விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்ட கௌதம், கபாலி (எ) வெங்கடேசன் மற்றும் அலமேலு ஆகிய மூவரும் நேற்று (01.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். 3 இளஞ்சிறார்கள் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here