தூய்மை பணியாளர்கள் ஒரே நாளில் 13பேர் பணி ஓய்வு வடக்கு வட்டார துணை ஆணையாளர் தலைமையில் கட்டி தழுவி ஆர பாராட்டி வழியனுப்பி வைப்பு;

0
219

மண்டலம் 4 இல் பணி புரிந்து வந்த தூய்மை பணியாளர்கள் ஒரே நாளில் 13பேர் பணி ஓய்வு
வடக்கு வட்டார துணை ஆணையாளர் தலைமையில் கட்டி தழுவி ஆர பாராட்டி வழியனுப்பி வைப்பு
பணி நிறைவு பெற்று ஓய்வுதியத்திற்காக காத்திருக்காமல் கையோடு ஓய்வூதியம் அளித்து அசத்தல்தண்டையார்பேட்டை.
சென்னை மாநகராட்சி சார்பில் மண்டலம் நான்கில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள் 10 பேர் உட்பட 13பேர் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர்
இவர்களுக்கு வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் மணடல குழு தலைவர் நேதாஜி கணேசன் முன்னிலையில் பணி ஓய்வு பெறும் 13 பேருக்கும் பாராட்டு விழா தண்டையார்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா அவர்களுக்கு புத்தாடை வழங்கி அவர்களுக்கு சேர வேண்டிய பணத்திற்கான காசோலையை வழங்கினார் பின்னர் அவர் பேசும்போது
வெயில் மழை காலங்களிலும் கொரோனா காலங்களிலும் ஓய்வெடுக்கமால் உழைத்த உங்களுக்கு பாராட்டுகள் அவசர காலங்களில் உங்களுடைய பணி சிறப்பாக இருந்தது என்று பாராட்டினார்
மேலும் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் பெண் தூய்மை பணியாளரை கட்டி பிடித்து பாராட்டி அனுப்பினார்
ஓய்வு பெற்ற 13 தூய்மை பணியாளர்களுக்கு தனித்தனியாக காசோலை வழங்கப்பட்டது மொத்தமாக ஒரே நாளில் 74 லட்ச ருபாய் கான காசோலை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது பணி ஓய்வு பெறுபவர்கள் அவர்களுக்கு சேர வேண்டிய பணம் கிடைக்காமல் அலையாமல் பணி ஓய்வு பெற்றவுடன் காசோலை வழங்கிய இந்த நிகழ்வு தூய்மை பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here