
புதுவண்ணாரப்பேட்டை சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரே புது வண்ணாரப்பேட்டை 39 ஆவது வார்டு ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ட்ரான்ஸ்பார்மர் மூலம் மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது இதன் அருகே பூக்கடைகள் காய்கறி கடைகள் ஆகியவைகள் ஆக்கிரமித்து உள்ளனர் மேலும் அவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடைகள் வாட்டர் பாட்டில்கள் ஆகியவைகளை மின்சார பெட்டிக்குள் வைத்துள்ளனர் மேலும் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஒரு புறம் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இன்று திடீரென மின்சாரம் பற்றி எரிந்தது டிரான்ஸ்பார்மர் அருகே கடை போட்டவர்கள் உயிர் தப்பிக்க பப்பி ஓடினர் மேலும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது மேலும் அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர் எரிந்த டிரான்ஸ்பார்மர் முழுவதுமாக பாதிப்பு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் இது தொடர்பாக ஆக்கிரமிப்பு வியாபாரிகள் மேல் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர் இருந்தும் தீ எரிந்ததால் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர் தண்டையார்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நிலைய அலுவலர் அஞ்சாப்புளி தலைமையில் மூன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து தீயை எஃப் சி பி பவுடர் மூலம் அனைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.















