பெண்களின் தாலி குறித்து அவதூறாக பேசிய பிரதமர் இந்திய பெண்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் தென்சென்னை மாமன்றப்பினர் மகிளா காங்கிரஸ் சுகன்யா செல்வம் தெரிவித்துள்ளார்இந்திய பெண்களின் தாலி குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடியின் விமர்சனத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பாஜகவிற்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகன்யா செல்வம்
தேர்தல் பரப்புரை யின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை பறிக்க தான் விடமாட்டேன் என்று பிரதமர் மோடி கூறுகிறார்
வடமாநிலத்தின் வெயிலின் தாக்கத்தினால் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறி கொட்டி வருவதாக தெரிவித்த அவர், மணிப்பூரில் பெண்களின் நிர்வாணப்படுத்தி கொலைசெய்யபட்டனர் ஏன் அவர்களுடைய தாலியைப் பற்றி பிரதமர் மோடி கவலைப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக சரிந்து கொண்டு வரும் சூழ்நிலையில் தலைப்புச் செய்தியாக இருப்பதற்காக இது போன்ற பேசி வருவதாக கூறினார்திருமணம் செய்துவிட்டு கட்டிய மனைவியை விட்டுச்சென்றவர் தான் பிரதமர் மோடி என்று குற்றம் சாட்டினார்.தாலி என்பது இந்திய கலாச்சாரத்தின் அடையாளம் இதைப் பற்றிய தப்பா பேசிய பிரதமர் மோடிக்கு தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படும் என்றார்எங்களின் தாலி அடகு கடைக்கு போகக்கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து செய்யக்கூடிய கட்சி தன் காங்கிரஸ் கட்சி
பெண்களை அவமானப்படுத்துவது பாலியல் வன்புணர்வு செய்வது பாஜக ஆட்சிபெண்களை மகாலட்சுமி போல் கருதுவதனால்தான் மகாலட்சுமி திட்டம் என்று கூட வைத்திருக்கிறோம் என்றார்.இந்திய நாட்டுக்காக தன் தாலியை இழந்தவர் சோனியா காந்தி என்றும் இந்திரா காந்தி நாட்டுக்காக தங்கத்தை குடுத்தவர் என்றும் இவர்கள் தாலியை பறிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்மகளிர் பற்றி பேச எந்த அருகதியும் இல்லை என்றும் இந்திய பெண்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
















