திருவெறும்பூர், மலைக் கோயிலில் காலை பாரதப் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் படி, பணியானது இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவரம்பூர் நகர் மண்டல் பாஜகவின் சார்பாக, தலைவர் ஆர். பி பாண்டியன் தலைமையில் மலைக்கோவில் வடக்கில் உள்ள மாநகராட்சி நடு நிலை பள்ளியில் தூய்மைப்பணி திட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் சார்பில் உள்ளமண்டல் நிர்வாகிகள் , மற்றும் மாவட்ட, மண்டல் மகளிர் நிர்வாகிகள் இணைந்து 100 க்கும் மேற்பட்ட நபர்கள், தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
















