பொன்னேரி அக்-4திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி இணைந்து நடத்திய மகளிர் சுய உதவி குழுவினருக்கென்று ஒருநாள் அறிவியல் விழிப்புணர்வு முகாம் கல்லூரி ஆய்வரங்கத்தில் நடைபெற்றது. இதில் மகளிரின் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்தும் காளான் வளர்ப்பு குறித்தும், இயற்கை உரங்கள் தயாரிப்பு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் காளான் வளர்ப்பு மற்றும் பயன்பாடு, இயற்கை உரங்கள் தயாரிப்பு குறித்த செய்முறை பயிற்சி விளக்கம் அளிக்கப்பட்டது. தரமணி ஸ்ரீ ஆமுமு முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி முனைவர் அருண்குமார் மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் சுமார் 40 பேருக்கு இந்த பயிற்சியினை அளித்தார். கல்லூரி செயலர் லலித் குமார் ஓஜெயின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி வேதியியல் துறை தலைவர் பவானி வரவேற்ற இந்த நிகழ்ச்சியில் உறுப்பினர் செயலர் முனைவர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார். கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா பயிற்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.













