திருவொற்றியூரில் நடமாடும் இதய பரிசோதனை மைய பேருந்தில் பொதுமக்களுக்கு பரிசோதனை :

0
227


திருவெற்றியூர் மார்ச் 10-    சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனையில் நடமாடும் இதய பரிசோதனை மைய பேருந்து மூலமாக சோதனை மற்றும் சிகிச்சை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வசதியாக நடமாடும் இதய பரிசோதனை மைய பஸ்சை நேற்றைய முன் தினம் துவக்கி வைத்தனர்

இதனைத் தொடர்ந்து திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மைய வளாகத்தில் நடமாடும் பேருந்து உதவியுடன் இதய நோய் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டு பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட மொபைல் பேருந்தில் வைத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் இருதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கான எக்கோ இசிஜி உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டது திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, மண்டல அலுவலர் சங்கரன் மற்றும் மண்டல நல அலுவலர் மாலதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திரவியம் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டு பரிசோதனையை துவக்கி வைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here