சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று, இன்று மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த காலங்களை போல் அல்லாமல் மழைநீர் தேங்காாமல், உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,
இருந்தபோதிலும் இன்றும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கியவாறு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை பூக்கடை, யானை கவுனி அருகே மழை காரணமாக பழைய கட்டிடம் ஒன்றின் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில், சாலையில் சென்ற நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.தீயணைப்பு துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் மீட்பு படையினர் கட்டிட ஈடுபாடுகளை வேறு யாரேனும் சிக்கி உள்ளார்களா என்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுகாயம் அடைந்த மூன்று பேரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















