மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

0
144

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பில்லாந்திபட்டு ஊராட்சிக்கு
உட்பட்ட சோலையூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் என்பவரின் மகன் சத்யா (24). கட்டிட மேஸ்திரி ஆவார். இவர் இன்று காமராஜபுரம் பகுதியில் கற்பகம் என்பவரது வீட்டில் கட்டிட பணியினை செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எலக்ட்ரிக் ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டார். இதனை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வடுகன்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் லத்தேரி சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here